GOAT ரிலீஸ் ப்ரோமோ வெளியானது...வைரலாகும் வீடியோ
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. ரசிகர்களின் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த படத்திற்கு டிக்கெட் புக்கிங்குகளும் ஏற்கனவே துவங்கி விட்டது. விஜய்யின் ரசிகர்கள் இந்த படத்தின் வெற்றிக்காக அங்கங்கே அன்னதானம் செய்து வருகின்றனர். படத்தயாரிப்பு நிறுவனம் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய அவ்வப்போது போஸ்டர்களும், ஸ்கூப் நியூஸ்-உம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் படத்தயாரிப்பு நிறுவனமான AGS என்டர்டைன்மெண்ட் ரிலீஸ் ப்ரோமோ வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. GOAT திரைப்படத்தில், விஜய் உடன் பிரஷாந்த், பிரபு தேவா, மீனாட்சி சவுதிரி, சினேகா, லைலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர்ராஜா இசையில் படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளது.