GOAT வெளியாகும் முன்னரே அதிக விலைக்கு வாங்கிய ஓடிடி நிறுவனம்
நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்,'G.O.A.T'. ஏ.ஜி.எஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது. இப்படத்தை பற்றி தினந்தோறும் புதிய அபிடேட்கள் வெளிவரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமை பற்றி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, GOAT வெளியாகும் முன்னரே மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாம். இந்த விலை, விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான 'லியோ' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விட அதிகம் எனவும், விஜய்யின் கெரியரில் அதிக தொகைக்கு விற்பனையான படம் இது எனவும் கூறப்படுகிறது.