
விஜய் ஆண்டனி நடிக்கும் 'ஹிட்லர்' திரைப்படத்தின் டீசர் வெளியானது
செய்தி முன்னோட்டம்
வானம் கொட்டட்டும், படைவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தனா இயக்கத்தில் தற்போது விஜய் ஆண்டனி நடித்து வரும் திரைப்படம் 'ஹிட்லர்'.
இப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளார்.
விவேக் மெர்வீன் இசையமைக்க, நவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் கௌதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி, சரண்ராஜ், இயக்குனர் தமிழ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனராம்.
பிரமாண்ட பொருட்செலவில் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் கொண்டுள்ள இப்படத்தினை செந்தூர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சஞ்சய்குமார், ராஜா உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில் தற்போது போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது.
இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் முன்னதாக வெளியிடப்பட்ட நிலையில், இன்று(டிச.,26)இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
டீசர் பதிவு
#Hitler Official Teaser Out Now https://t.co/NUviP9U2Ue pic.twitter.com/yZh3Rb3U1I
— CINE Talk (@talk_cinetalk) December 26, 2023