
பாராட்டுகளை அள்ளும் விஜய் ஆண்டனியின் உன்னத செயல்!
செய்தி முன்னோட்டம்
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், தற்போது இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து வரும் விஜய் ஆண்டனி, சென்ற மாதம் 'பிச்சைக்காரன் 2' படத்தை வெளியிட்டார். அந்த படத்தை இயக்கி, நடித்திருந்தது அவரே.
மே 19 வெளியான 'பிச்சைக்காரன் 2' படமும் கலவையான விமர்சனத்தை பெற்று, லாபத்தை தந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, விஜய் ஆண்டனி தொடர்ந்து பல அறப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு கட்டமாக ஆந்திராவில் உள்ள ஒரு மருத்துவமனையுடன் இணைந்து புற்றுநோயாளிகள் சிகிச்சை செலவை ஏற்பதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்காக antibikiligsl@gmail.com என்ற மெயில் ஐடிக்கு அணுகலாம் எனவும், ஆந்திராவை சேர்ந்த ஜி எஸ் எல் மருத்துவமனை உடன் இணைந்து இந்த அறப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கேன்சர் நோயாளிகளுக்கு விஜய் ஆண்டனியின் சேவை
#VijayAntony ❤️
— Manikandan,Ra (ரா மணிகண்டன்) (@manikan91521827) May 31, 2023
Great 👍 https://t.co/FgBEyUhXLc