அடுத்த செய்திக் கட்டுரை

MS தோனியை இயக்கும் விக்னேஷ் சிவன்; ஆனால் திரைப்படத்திற்காக அல்ல!
எழுதியவர்
Venkatalakshmi V
Oct 17, 2023
01:22 pm
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்சமயம் திரைப்படங்கள் எதுவும் இயக்கவில்லை. மாறாக தன்னுடைய ரவுடி பிக்ச்சர்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம், லைகா நிறுவனம் தயாரிக்க, அஜித்குமாரை இயக்குவதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் பல்வேறு காரணங்களால் படம் நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் அவர் புதிதாக வேறு படம் இயக்கும் அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், தற்போது அவர் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை இயக்கப்போவதாக கூறியுள்ளார்.
ஆனால், அது திரைபடமன்று!
மாறாக G -Square நிறுவனத்தின் விளம்பர படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஷூட்டிங் இடைவெளியின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விக்னேஷ் சிவன், தன்னுடைய ஹீரோவை இயக்குவது தான் செய்த பாக்கியம் என பதிவிட்டுள்ளார்.