Loading...
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் பாலிவுட் நாயகி! ஜெயிலர் 2 படத்தின் காந்தா கேரக்டர் வீடியோ வெளியீடு
ஜெயிலர் 2 படத்தின் காந்தா கேரக்டர் வீடியோ வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் பாலிவுட் நாயகி! ஜெயிலர் 2 படத்தின் காந்தா கேரக்டர் வீடியோ வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 20, 2026
08:56 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடிக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் நட்சத்திரப் பட்டாளம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. "பொறுமை மற்றும் விடாமுயற்சியின் உருவம்" என்ற வாசகத்துடன் இவரை அறிமுகப்படுத்தும் சிறப்பு வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

காந்தா கதாபாத்திரம்

காந்தா கதாபாத்திரத்தின் ரகசியமும் எதிர்பார்ப்பும்

இப்படத்தில் வித்யா பாலன் காந்தா என்ற சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இருப்பினும், கதைக்களத்தில் இவரது கதாபாத்திரம் ரஜினிகாந்துடன் எவ்வாறு தொடர்புடையது என்பது குறித்த விவரங்களை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.

முதன்முறையாக ரஜினிகாந்துடன் வித்யா பாலன் திரையைப் பகிர்ந்து கொள்வது இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

நெல்சனின் வித்தியாசமான திரைக்கதையில் வித்யா பாலனின் நடிப்பு மிக முக்கியத் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரங்கள் பட்டாளத்துடன் தயாராகும் பிரமாண்டப் படம்

ஏற்கனவே ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் விநாயகன் ஆகியோருடன் இணைந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கின்றனர்.

மேலும், போதி கல்பக் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, மிதுன் சக்ரவர்த்தி மற்றும் ஜடின் சர்னா ஆகிய முன்னணி நடிகர்களும் புதியதாக இணைந்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தைக் கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறது.

ADVERTISEMENT

அக்டோபர் 15

அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு

2023-இல் வெளியாகி உலகளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT