Page Loader
ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ

ஜைசால்மர் ஹோட்டல் ஊழியர்கள் ரஜினிக்கு அளித்த பிரமாண்ட வரவேற்பு; இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Feb 01, 2023
03:19 pm

செய்தி முன்னோட்டம்

ஜெயிலர் படப்பிடிப்பிற்காக இரு தினங்களுக்கு முன்னர், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜைசால்மர் சென்றுள்ளார். அங்கு அவர் தங்கி இருக்கும் ஹோட்டலில், அவரை வரவேற்கும் விதமாக, அந்த ஹோட்டல் ஊழியர்கள், மாலை அணிவித்து, பாட்டு பாடி நடனம் ஆடி வரவேற்றனர். 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தின் லுங்கி டான்ஸ் பாடலுக்கு அவர்கள் ஆடியதை, புன்னைகையுடன் ரஜினி ரசிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி உள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில், புனீத் ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஆடல் பாடலுடன் ரஜினிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு