LOADING...
'நம்பிக்கை..விடாமுயற்சி': அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வெளியானது

'நம்பிக்கை..விடாமுயற்சி': அஜித்தின் விடாமுயற்சி ட்ரைலர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2025
06:51 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் குமார் நடிக்க, மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. டீசரில் காட்டியதை விட பல மடங்கு கூஸ்பம்ப்ஸ் மொமெண்ட்ஸ் நிறைந்துள்ளது இந்த ட்ரைலர். ஏற்கனவே தெரிவித்திருந்ததை போல, இப்படம் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களைக் கொண்ட ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் ஆகும். இப்படத்தின் கதைக்களம் 1997 ஆம் ஆண்டு வெளியான ப்ரேக்டவுன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்பட்டாலும், ட்ரைலரில் உண்மையாகவே ரசிகர்களை ஏற்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியின் தொழில்நுட்பக் குழுவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், எடிட்டர் என்.பி.ஸ்ரீகாந்த் மற்றும் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post