LOADING...
அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி; 'விடாமுயற்சி' ரிலீஸ் ஒத்திவைப்பு; என்ன காரணம்?
'விடாமுயற்சி' பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது

அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி; 'விடாமுயற்சி' ரிலீஸ் ஒத்திவைப்பு; என்ன காரணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 01, 2025
09:13 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' திரைப்படம் வரும் 2025 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது, பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பற்றிய நேற்று இரவு லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விடாமுயற்சி' திரைப்படத்தில், அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

என்ன காரணம்?

பட ஒத்திவைப்பிற்கு என்ன காரணமாக இருக்கக்கூடும்?

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியானதும், இது ஹாலிவுட் படமான 'பிரேக் டவுன்' படத்தின் தமிழ் ரீமேக் என ரசிகர்கள் விமர்சனம் வைத்தனர். அதனைத்தொடர்ந்து, 'பிரேக் டவுன்' படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்திற்கு ராயல்டி கோரி மின்னஞ்சல் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. தற்போது படத்தின் வெளியீடு தள்ளிபோனதிற்கு காரணம், இப்படத்தின் உரிமையை வாங்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கலே என ஊடக செய்திகள் தெரிவிக்கிறது. மகிழ் திருமேனியும் இது தன்னுடைய கதை அல்ல, படத்தின் திரைக்கதை மட்டுமே தான் எழுதியது என்பதை ஒரு பேட்டியில் ஒப்புக்கொண்ட நிலையில், இது ரீமேக் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post