NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'வேட்டையன்' படத்தில் ரஜினியின் டயலாக் பேசி அசத்திய ஃபஹத் ஃபாசில்: டெலிடெட் சீன் வெளியீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    'வேட்டையன்' படத்தில் ரஜினியின் டயலாக் பேசி அசத்திய ஃபஹத் ஃபாசில்: டெலிடெட் சீன் வெளியீடு
    ரஜினியின் டயலாக் பேசி அசத்திய ஃபஹத் ஃபாசில்

    'வேட்டையன்' படத்தில் ரஜினியின் டயலாக் பேசி அசத்திய ஃபஹத் ஃபாசில்: டெலிடெட் சீன் வெளியீடு

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 17, 2024
    08:04 pm

    செய்தி முன்னோட்டம்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் "வேட்டையன்".

    இதில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி மற்றும் ரக்‌ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    இந்த படத்தில் ரஜினி காட்சிகளை தவிர மக்கள் அதிகமாக ரசித்தது ஃபஹத் ஃபாசில் நடித்த காட்சிகளை தான்.

    கோமாளித்தனமாக அதே நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படும் பேட்ரிக் என்ற 'பேட்டரி' கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

    தற்போது, படத்தின் நீளம் காரணமாக, வெளியிடப்படாத சில ஃபஹத் ஃபாசில் காட்சிகளை படக்குழு வெளியிட்டு வருகிறது,

    டெலிடெட் சீன்

    ரஜினியின் முத்து படத்தின் பிரபல டயலாக்-ஐ பேசிய ஃபஹத்

    சமீபத்தில் ரஜினி மற்றும் ஃபஹத்திற்கு இடையே நடைபெற்ற காட்சி ஒன்று அன்சீன் வீடியோவாக வெளியான நிலையில் இன்று மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.

    அதில் ஃபகத் ஃபாசில், "முத்து" படத்தில் ரஜினிகாந்த் கூறும் வசனத்தை நடித்துள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    வேட்டையன் படத்தில் ஃபகத் ஃபாசில் மற்றும் ரித்திகா சிங் இடையிலான காட்சிகள் தான் அதிகம். ரசிகர்களும் இந்த காட்சிகளை ரசித்தனர்.

    இன்று வெளியான டெலேட்ட் சீன் வீடியோவிலும் அவர்கள் இருவரும் இணைந்துள்ள காட்சிகளே இடம்பெற்றுள்ளது.

    "வேட்டையன்" படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Patrick’s fanboy moment hits differently in this VETTAIYAN 🕶️ unseen video, as he recreates Thalaivar’s legendary dialogue! 🤩#Vettaiyan 🕶️ #VettaiyanTheHunter 🕶️pic.twitter.com/wUJm6CNhNN

    — Lyca Productions (@LycaProductions) October 17, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வேட்டையன்
    ஃபஹத் ஃபாசில்
    ரஜினிகாந்த்
    திரைப்பட வெளியீடு

    சமீபத்திய

    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025
    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025

    வேட்டையன்

    ரஜினியின் 'வேட்டையன்' படத்தில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் இதுதான்! அமிதாப் பச்சன்
    அரசியல் கேள்விகள் என்னிடம் கேட்காதீர்கள்: ரஜினி காட்டம் ரஜினிகாந்த்
    ஹண்டர் வண்டார்: ரஜினிகாந்தின் வேட்டையனின் 2வது சிங்கிள் வெளியானது அனிருத்
    'ஹண்டர் வாண்டார் சூடுடா': ரஜினியின் 'வேட்டையன்' ப்ரீவ்யூ வீடியோ வெளியானது ரஜினிகாந்த்

    ஃபஹத் ஃபாசில்

    'மாமன்னன்' திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைய இருக்கும் வடிவேலு, பகத் பாசில் கோலிவுட்
    மாமன்னனுக்கு பிறகு மீண்டும் இணையும் வடிவேலு, ஃபகத் ஃபாசில் ஜோடி வடிவேலு
    ஹாப்பி பர்த்டே ஃபஹத்: இரு பெரும் ஜாம்பவான்களுடன் ஃபஹத் ஃபாசில் ரஜினிகாந்த்
    ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் தேதி உறுதியானது! ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    'மனசிலாயோ': ரஜினிகாந்தின் 'வேட்டையன்' படத்தின் முதல் பாடல் வெளியானது பாடல் வெளியீடு
    'மனசிலாயோ'; வேட்டையன் பாணியில் ஓணம் திருவிழாவிற்கு வாழ்த்து தெரிவித்த கூலி படக்குழு ஓணம்
    பிக் பாஸ் தெலுங்குவில் ரஜினிக்கு ட்ரிபூட் செய்த நாகர்ஜுனா தெலுங்கு திரையுலகம்
    ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு இசை வெளியீடு

    திரைப்பட வெளியீடு

    ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரஷ்மிகா மந்தனா
    இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த லைகா இந்தியன் 2
    ரஜினியின் 'வேட்டையன்' வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு ரஜினிகாந்த்
    அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா 2 டீஸர் வெளியானது அல்லு அர்ஜுன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025