'விடுதலை 2' திரைப்படம் தாமதமாவதற்கான காரணம் என்ன: பதிலளித்தார் இயக்குநர் வெற்றிமாறன்
செய்தி முன்னோட்டம்
வெற்றிமாறன் இயக்கத்தில் சென்ற மார்ச் மாதம் வெளியான திரைப்படம், 'விடுதலை'. நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகமான இத்திரைப்படம், பலராலும் பாராட்டப்பட்டது.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.
'வாத்தியார்' என்ற கதாபாத்திரத்தில் படத்தின் முக்கிய தருணத்தில் தோன்றும் விஜய் சேதுபதியின் பிளாஷ்பேக் காட்சிகள் இரண்டாம் பாகத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், 'விடுதலை 2' திரைப்படம் தாமதமாவதற்கான காரணம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசி இருக்கிறார்.
"பனி பொழிவில் படத்தின் இறுதி காட்சிகளை படமாக்க 100 நாட்கள் சிரமப்பட்டோம். எனினும், 100 நாட்களுக்கு பிறகும் அக்காட்சிகளை படமாக்க முடியவில்லை." என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.
டவ்ட்ஜ்
தாமதத்திற்கான காரணம் என்ன?
தொடர்ந்து பேசிய அவர், "அதன் பிறகு தான் தெரிந்தது, நான் எடுக்கும் விதத்தில் தொடர்ந்தால் 4 ஆண்டுகள் ஆனாலும் அந்த காட்சிகளை படமாக்க முடியாது என்று. எனவே, செயற்கை பனி பொழிவை பயன்படுத்தி அக்காட்சிகளை படமாக்கினோம். அதனால் தான் 'விடுதலை 2' திரைப்படம் தாமதம் ஆனது." என்று கூறியுள்ளார்.
'அசுரன்' படத்திற்கு பிறகு நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் படம் 'விடுதலை' ஆகும்.
ஜெயமோகனின் 'துணைவன்' என்னும் சிறுகதையினை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கதை மக்கள் அனைவருக்கும் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதால் வெற்றிமாறன் இப்படத்தினை இரண்டு பாகமாக வெளியிட திட்டமிட்டிருந்தார்.