LOADING...
'வட சென்னை' உலகில் சிலம்பரசனின் 'அரசன்'! யூட்யூபில் வெளியான ப்ரோமோ
இப்படம் வெளிவரும் முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

'வட சென்னை' உலகில் சிலம்பரசனின் 'அரசன்'! யூட்யூபில் வெளியான ப்ரோமோ

எழுதியவர் Venkatalakshmi V
Oct 17, 2025
11:29 am

செய்தி முன்னோட்டம்

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் (STR) நடிக்கும் புதிய திரைப்படமான "அரசன்" படத்தின் ப்ரோமோ வீடியோ நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இன்று காலை யூட்யூபில் வெளியாகியுள்ளது. இந்தப் படம், 2018ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'வட சென்னை' படத்தின் தொடர்ச்சியாக வடசென்னை பிரபஞ்சத்தின் கதை களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடையே இப்படம் வெளிவரும் முன்னரே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவரங்கள்

இரு காலகட்டங்களில் நகரும் கதை

வெளியான ப்ரோமோ மூலம் படத்தின் கதை அமைப்பு குறித்த சில முக்கியத் தகவல்கள்: 'வட சென்னை' பாணியைப் போலவே, 'அரசன்' திரைப்படம் இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. சிலம்பரசன் இரு வேறு காலகட்டங்களில் கதாபாத்திரம் நகர்வதை காட்டுகிறது. அதாவது ஒரு முரட்டுத்தனமான இளைஞனாகவும், பின்னர் முதிர்ந்த நபராகவும் சிம்பு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். வயதான சிலம்பரசன், மூன்று கொலைகள் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராவதாக ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. அங்கு அவர் இயக்குநர் நெல்சனிடம் (Director Nelson) தனது கதையை திரைப்படமாக எடுக்க கோருகிறார். மேலும், அந்தப் படத்தில் தனுஷை நடிக்க வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கூட்டணி

வெற்றிமாறன் - அனிருத் முதல் கூட்டணி

'அரசன்' படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். அனிருத்தின் இசை 'வட சென்னை'க்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தாலும், கதைக்களத்திற்குப் பொருத்தமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது வெற்றிமாறன் - அனிருத் கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, தனது வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இந்த 'அரசன்' படத்திற்கான தீம் மியூசிக்கை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, நடிகர் சிலம்பரசன் அனிருத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து இசையமைப்பாளரைப் பாராட்டினார்.