
பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி தனது 67 வது வயதில் இன்று காலை 10:30 மணியளவில் காலமானார்.
கடந்த சிலகாலமாக அவர்உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவரது உடல், தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் கவுண்டமணி, 1963-ம் ஆண்டு சாந்தியை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என இரு மகள்கள் உள்ளனர்.
சாந்தியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JustNow | நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் காலமானார். #SunNews | #Goundamani | #Shanthi pic.twitter.com/hdJ0lm5ahL
— Sun News (@sunnewstamil) May 5, 2025
கவுண்டமணி
கவுண்டமணியின் திரைப்பயணம்
சுப்ரமணியனாக கோவை மாவட்டத்தில் பிறந்த கவுண்டமணி தமிழ் சினிமாவின் நகைச்சுவை கிங் எனப் பெயர் பெற்றவர்.
'70 களில் வெளியான 'சர்வர் சுந்தரம்', 'ராமன் எந்தன் ராமனடி' திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், '16 வயதினிலே' (1980) படத்தின் மூலமாக முக்கிய நடிகராக உருமாறினார்.
1980 மற்றும் 90-களில் செந்திலுடன் இணைந்து நடித்து, பிரபல நகைச்சுவை ஜோடியாக திகழ்ந்தார். கவுண்டமணியின் நகைச்சுவை பல ஓடாத படங்களையும் ஓட வைத்தது.
சீரியசாக இருக்கும் திகில், காதல் மற்றும் குடும்ப கதைகளில் நகைச்சுவை மூலம் ரசிகர்களுக்கு relief-ஐ தந்து, தனக்கென தனி இடம் உருவாக்கினார்.
அவர் கடைசியாக 49-O என்ற படத்தில் நடித்தார். தற்போது உடல்நலன் காரணமாக திரையுலகை விட்டு ஒதுங்கி உள்ளார் கவுண்டமணி.