Loading...
பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்
பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
02:39 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் தனது இயல்பான நடிப்பினாலும் பாசமிக்க பாட்டி கதாபாத்திரங்களினாலும் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். நாடக மேடைகளில் இருந்து தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய வத்சலா ராஜகோபால், பல ஆண்டுகள் மேடை நாடகங்களில் நடித்து கவனம் பெற்றார். திரையுலகில் நடிக்க முயன்ற அவருக்கு தனது 60 வயதில்தான் முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா' திரைப்படத்தில் நடிகை மதுபாலாவுக்கு பாட்டியாக நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

திரைப்பயணம்

400க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்

வயதான காலத்தில் சினிமாவில் அறிமுகமானாலும், தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் வத்சலா ராஜகோபால்.

'சதி லீலாவதி', 'திருடா திருடி', 'காலமெல்லாம் காதல் வாழ்க', 'அந்நியன்', 'ரிதம்', 'மொழி', 'வின்னர்' மற்றும் 'பட்டியல்' உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரை மட்டுமன்றி, சன் டிவியின் 'சித்தி', 'ஆனந்தம்', 'முந்தானை முடிச்சு' மற்றும் 'வசந்தம்' போன்ற பல பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக உயிரிழந்த வத்சலா ராஜகோபாலின் உடல், அஞ்சலிக்காக பல்லாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT