நடிகர் சிம்புவிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
நடிகர் சிலம்பரசன், வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன், கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற படத்தில் நடிப்பதற்கு அட்வான்ஸ் பெற்றிருந்தார். ஆனால் சில காரணங்களால் படம் அறிவிப்பிற்கு பிறகு ட்ராப் ஆனது. அதனால் மற்ற படங்களில் நடிக்கத்தொடங்கினார் சிம்பு. இதனை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தை அணுகிய தயாரிப்பாளர் தரப்பு, அவர் கொரோனா குமார் படத்தை நடித்து முடிக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , தடை விதித்தால் பிற நிறுவனங்களுடனான பணிகள் பாதிக்கும் எனக்குறிப்பிட்டார். இந்த வழக்கில், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, ₨ 1கோடிக்கான உத்தரவாதத்தை சிம்பு செலுத்திவிட்டார் எனவும் நீதிபதி கூறி, மத்தியஸ்தராக வழக்கறிஞர் என்.எல்.ராஜாவை நியமித்து உத்தரவு பிறப்பித்தது.