
பாலியல் புகார்: பிக்பாஸ் விக்ரமன் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
செய்தி முன்னோட்டம்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவரும், விசிக மாநில நிர்வாகிகளான விக்ரமின் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளம் மூலம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி 13 லட்சம் வரை மோசடி செய்ததாக லண்டனில் வசிக்கும் பெண் விக்ரமன் மீது கடந்த ஜூலையில் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
இந்நிலையில் அப்பெண் லண்டனில் இருப்பதால் இணையதளம் மூலமாக புகார் அளித்திருந்தார். இப்புகார் மீது நடவடிக்கை இல்லாததால், நீதிமன்றத்தை அணுகிய அப்பெண் வழக்குப்பதிய உத்தரவு பெற்றார்.
இதன் அடிப்படையில் தற்போது பாலியல் வன்கொடுமை, மோசடி உள்ளிட்ட 13 பிரிவுகளின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மோசடி புகாரில் 13 பிரிவுகளின் கீழ் வழக்கு
#JUSTIN விசிக பிரமுகர் விக்ரமன் மீது வழக்கு #Vikraman #News18tamilnadu | https://t.co/7dpn9FD15R pic.twitter.com/1We6B4PqbR
— News18 Tamil Nadu (@News18TamilNadu) October 29, 2023