'வருஷமெல்லாம் வசந்தம்' பட இயக்குநர் ரவி சங்கர் தூக்கிட்டு தற்கொலை
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்: 2002ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த படம் 'வருஷமெல்லாம் வசந்தம்' ஆகும்.
இப்படத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மற்றும் காதலர் தின நாயகன் குணால் ஆகியோர் கதாநாயர்களாக நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வரும் 'எங்கே அந்த வெண்ணிலா' மற்றும் 'அடியே அனார்கலி' ஆகிய பாடல்கள் இன்றும் பலரால் ரசித்து கேட்கப்படுகிறது என்று சொன்னால் மிகையாகாது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநரும் பாடலாசிரியருமான ரவி சங்கர் நேற்று இரவு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ் திரைப்படங்கள்
'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலை எழுதியதும் இவர் தான்
இயக்குநர் விக்ரமனின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த இவர், 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தை மட்டுமே இதுவரை இயக்கி இருக்கிறார்.
அது போக 'சூரியவம்சம்' படத்தில் வரும் 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடலின் பாடலாசிரியரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
2002ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த திரைப்படத்தையும் இயக்காத இவர், திருமணம் செய்யாமல் சென்னை கே.கே.நகர் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், வர நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனிமையும், பட வாய்ப்பு கிடைக்காததுமே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.