Page Loader
வாரிசு படத்தின் கலை இயக்குனர், சுனில் பாபு, கேரளாவில் திடீர் மரணம்
கலை இயக்குனர் சுனில் பாபு

வாரிசு படத்தின் கலை இயக்குனர், சுனில் பாபு, கேரளாவில் திடீர் மரணம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 06, 2023
07:40 pm

செய்தி முன்னோட்டம்

தளபதி விஜய்யின், வாரிசு படத்தின் கலை இயக்குனரான சுனில் பாபு, கேரளாவின் எர்ணாகுளத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 50. தனியார் மருத்துவமனையில், மாரடைப்பு காரணமாக சுனில் உயிரிழந்ததாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய திரையுலகில் பல புகழ் மிக்க படங்களில் கலை இயக்குனராக பணிபுரிந்த சுனில் பல விருதுகளை பெற்றுள்ளார். 2005 ஆம் ஆண்டுக்கான, கேரளாவின் சிறந்த கலை இயக்குனருக்கான மாநில திரைப்பட விருதை ஆனந்தபத்ரா (2005) திரைப்படத்திற்காக சுனில் வென்றுள்ளார். சுனில் பாபு, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார்.

Instagram அஞ்சல்

திரையுலகம் அஞ்சலி

திரையுலகம் அஞ்சலி

சுனில் பாபு மறைவு

புகழ் பெற்ற திரைப்படங்களான, பிரேமம், பெங்களூர் நாட்கள், கஜினி, சீதா ராமம் ஆகியவை இவரின் கலை திறமையால் உருவான படங்கள். கலை இயக்குனர் சாபு சிரிலின் உதவியாளராக தனது கலை பயணத்தை தொடங்கிய சுனில் பாபு, துப்பாக்கி, பீஷ்ம பர்வம், மகரிஷி, ஊபிரி போன்ற தென்மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். சோட்டா மும்பை, சிங் இஸ் கிங், எம்எஸ் தோனி, பா, லக்ஷ்யா, ஸ்பெஷல் 26 போன்ற மிகப்பெரிய பிளாக்பஸ்டர் பாலிவுட் படங்களும், இவர் திறமையால் உருவானவையே. இவரின் திடீர் மறைவு, திரை உலகில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர் பலர், அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

சுனில் பாபு மறைவு