Page Loader
திரைப்படமாகிறது வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம் 
திரைப்படமாகிறது வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம்

திரைப்படமாகிறது வாச்சாத்தி வன்கொடுமை சம்பவம் 

எழுதியவர் Nivetha P
Oct 20, 2023
08:11 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 1992ம் ஆண்டு நிகழ்ந்த வாச்சாத்தி வன்முறை சம்பவமானது தமிழக அரசு அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய கொடுமை ஆகும். இந்த வழக்கிற்கு அண்மையில் தண்டனைகள் உறுதிசெய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் நிவாரண தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களை நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் இந்த வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை சார்ந்த சம்பவத்தினை திரைப்படமாக எடுக்க போவதாக நடிகை மற்றும் இயக்குனருமான ரோகிணி தெரிவித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில், 'ஜெய்பீம்' படத்தில் செங்கேணியாக நடித்த லிஜோமோல், மற்றும் ரோஹிணி நடிக்கவுள்ளனர். இப்படத்திற்கு ஆதவன் தீட்சண்யா திரைக்கதை மற்றும் வசனம் எழுதவுள்ள நிலையில், இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

வாச்சாத்தி சம்பவம்