Page Loader
நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படம் குறித்த அப்டேட் 
நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படம் குறித்த அப்டேட்

நடிகர் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படம் குறித்த அப்டேட் 

எழுதியவர் Nivetha P
Aug 21, 2023
09:13 pm

செய்தி முன்னோட்டம்

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'லியோ'. இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது மிகமும்முரமாக நடக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தனது அடுத்த படமான 'தளபதி 68' படத்தினை வெங்கட் பிரபு இயக்கத்தில் இரட்டைவேடத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தினை ஏ.ஜி.எஸ்.,நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இப்படத்தில் விஜய்க்கு 2 ஜோடிகள் நடிக்கிறார்களாம். அதில் ஒருவர் ஜோதிகா என்று கூறப்பட்டு வந்த நிலையில், மற்றொரு ஜோடி பிரியங்கா மோகன் என்னும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன், தமன் அவர்களும் கைகோர்க்கிறாராம். ஒளிப்பதிவாளராக சித்தார்தா நுனி இப்படத்திற்கு கமிட் செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

'தளபதி 68' படம்