Page Loader
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட் இதோ! 
'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தின் அப்டேட் இதோ! 

எழுதியவர் Arul Jothe
May 24, 2023
06:18 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் நடிகர்கள் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை இயக்கியவர் செல்வராகவன். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் உருவாகும் எனவும், அதில் தனுஷ் தான் கதாநாயகன் எனவும் செல்வராகவன் முன்பே அறிவித்திருந்தார். நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், அதன்பின்னர் சில வருடங்களுக்கு பிறகு இந்தப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Aayirathil oruvan 2

ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து அப்டேட் கொடுத்த ஜி. வி. பிரகாஷ்

2021ல் நடிகர் தனுஷ் நடிப்பில் 'ஆயிரத்தில் ஒருவன் 2' திரைப்படம் வெளியாகும் என செல்வராகவன் அறிவித்திருந்தார். இந்தப்படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில், புதிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய பட்ஜெட் படமான 'பொன்னியின் செல்வன் 2' குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் இயக்குனர் செல்வராகவன், தனுஷ்தனுஷுடன் இணைந்து 'ஆயிரத்தில் ஒருவன் 2' படத்தை எடுக்கப்போவதாக அவர் உறுதிப்படுத்தினார் . செல்வராகவன் இயக்கிய முதல் பாகத்தை பாராட்டிய அவர், அடுத்த பதிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.