Page Loader
புஷ்பா 2 முதல் பொன்னியின் செல்வன் 2 வரை 2 பாகங்களாக வெளியாகப்போகும் படங்களின் பட்டியல் 
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் பொன்னியின் செல்வன் 2 அடுத்த வாரம் வெளியாகிறது

புஷ்பா 2 முதல் பொன்னியின் செல்வன் 2 வரை 2 பாகங்களாக வெளியாகப்போகும் படங்களின் பட்டியல் 

எழுதியவர் Venkatalakshmi V
Apr 23, 2023
11:00 am

செய்தி முன்னோட்டம்

சமீபகாலங்களில், பல திரைப்படங்கள் இரண்டு பாகங்களாக வெளிவர ஆரம்பித்துவிட்டன. ஆங்கில படங்களில் மட்டுமே கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த Sequel வழக்கம், பாகுபலி திரைப்படத்தின் மூலம் தான் தென்னிந்தியா சினிமாவில் பிரபலமானது எனக்கூறலாம். அந்த வகையில் இயக்குனர் ராஜமௌலி ஒரு முன்னோடி எனக்கூறலாம். அப்படி, முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, விரைவில் இரண்டாவது பாகத்தை வெளியிடப்போகும் படங்களின் பட்டியல் இதோ: விடுதலை 2: வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாக அறிமுகமான திரைப்படம் 'விடுதலை'. இந்த திரைப்படம் நேர்மறை விமர்சனங்கள் பெற்று, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் பலராலும் பாராட்டப்பட்டது. இதுவும் ஒரு நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமே. இதன் இரண்டாம் பாகம், ஓரிரு மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

card 2

பொன்னியின் செல்வன் 2 முதல் புஷ்பா வரை, இந்த ஆண்டு வெளியாகவுள்ளது 

பொன்னியின் செல்வன் 2: மணிரத்னம் இயக்கிய இந்த வரலாற்று திரைப்படம், அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. கல்கியின் புதினத்தை அடிப்படையாக கொண்டு உருவானது இந்த திரைப்படம். அந்த புத்தகமே 5 பாகங்களாக வெளிவந்துள்ளது. அதை சுருக்கி இரண்டு பாகத்தில் வெளியிட திட்டமிட்டார் மணிரத்னம். ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் என நடிகர் பட்டாளமே திரண்டு நடித்துள்ள இந்த படத்தை காண, PS ரசிகர்கள் மட்டுமின்றி, முதல் பாகத்தை கொண்டவர்களும் ஆர்வமாக உள்ளனர். புஷ்பா 2: சென்ற ஆண்டு மே மாதத்தில், புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியானது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் கதையை விரிவாக இரண்டாம் பாகத்தில் கூறுவார்கள் என கூறப்படுகிறது. இந்த திரைப்படம், இந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.