Page Loader
நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர் 

நாளை வெளியாகிறது மாமன்னன் ட்ரைலர் 

எழுதியவர் Venkatalakshmi V
Jun 15, 2023
12:02 pm

செய்தி முன்னோட்டம்

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோர் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மாமன்னன்'. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் வெளியானது. ரஹ்மான் இசையில், குறிப்பாக வடிவேலு பாடிய 'ராசாக்கண்ணு' பாடல் பலரின் பாராட்டையும் பெற்றது. உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என்பதால், இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. எனினும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்கா வண்ணம், நாளை (ஜூன் 16 .,) படத்தின் ட்ரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'மாமன்னன்' திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிக்கிறது. இந்த ட்ரைலர் அறிவிப்பு செய்தி தற்போது வைரலாகி வருகிறது.