Page Loader
ஒரு படத்திற்காக அதிகம் மெனக்கெட்ட கதாபாத்திரம் எது: டிவிட்டரில் வைரலாகும் கேள்வி
வாரணம் ஆயிரம் படத்துக்காக உடலமைப்பை மாற்றிய சூர்யா

ஒரு படத்திற்காக அதிகம் மெனக்கெட்ட கதாபாத்திரம் எது: டிவிட்டரில் வைரலாகும் கேள்வி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2023
10:07 am

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், ட்விட்டரில் ஒரு பயனர், 'இந்திய திரைப்படங்களில், ஒரு கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கெட்டதாக நீங்கள் எந்தப் படத்தைக் கருதுகிறீர்கள்?', என்ற கேள்வியை பதிவிட்டு இருந்தார். அதற்கு பதிலாக, அவரே ஒரு ட்விட்டர் பதிவை இட்டார். கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'தசாவதாரம்' படம் தான், தன்னுடைய கருத்துப்படி, மிகவும் மெனக்கெட்ட கதாபாத்திரமாக கருதுவதாக கூறியிருந்தார். சிலர், அதே கமலின் நடிப்பில் வெளியான 'அவ்வை ஷண்முகி' திரைப்படமும், அதனுடைய ஹிந்தி பதிப்பான 'chachi 420'யையும் குறிப்பிட்டு இருந்தனர். ஒருவர், 'வாரணம் ஆயிரம்' மற்றும் 'சூரரை போற்று' படங்களில், நடிகர் சூர்யாவின் கதாபாத்திரங்களை கூறியிருந்தார். மற்றொருவர், 'ஐ' படத்திற்காக நடிகர் விக்ரமை குறிப்பிட்டார். இந்த கேள்விக்கு உங்கள் தேர்வு என்ன என்பதை நீங்களும் குறிப்பிடுங்கள்!

ட்விட்டர் அஞ்சல்

இந்திய திரைப்படங்களில், மிகவும் மெனக்கெட்ட கதாபாத்திரம்

ட்விட்டர் அஞ்சல்

கமல்

ட்விட்டர் அஞ்சல்

சூர்யா மற்றும் விக்ரம்

ட்விட்டர் அஞ்சல்

'ஐ' விக்ரம்

ட்விட்டர் அஞ்சல்

அவ்வை ஷண்முகி