Page Loader
குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு
நடிகை த்ரிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் நேர்ந்த சோகம்!

குந்தவைக்கும், அருள்மொழிக்கும், ட்விட்டர் நிறுவனம் வைத்த ஆப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Apr 17, 2023
12:40 pm

செய்தி முன்னோட்டம்

தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் நெருங்கி வரும் நிலையில், அதை விளம்பரப்படுத்த படக்குழுவினர், குறிப்பாக நடிகை த்ரிஷா மற்றும் ஜெயம் ரவி, ட்விட்டரில் தங்களது பெயரை மாற்றியுள்ளனர். தங்களது கதாபாத்திரத்தின் பெயரான 'குந்தவை', 'அருண்மொழி வர்மன்' என்று மாற்றியுள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தின் புதிய விதிகளின் படி, ஒரு பயனர் தங்களது 'டிஸ்பிளே நேம்'-ஐ மாற்றினால், ப்ளூ டிக் நீக்கப்படும். இது தெரியாமல், இவர்கள் தங்கள் பெயர்களை மாற்றியதும், அவர்களது ப்ளூ டிக் நீக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த திரிஷா, தன்னுடைய பெயரை மீண்டும் 'த்ரிஷ்' என்று மாற்றி விட்டார். இருப்பினும், அவருக்கு ப்ளூ டிக் தரப்படவில்லை. 'ஒரு பேர் மத்தினது குத்தமாயா?' என்பது போல த்ரிஷா புலம்பி வருவதாக செய்தி.

ட்விட்டர் அஞ்சல்

த்ரிஷா, ஜெயம் ரவியின் ப்ளூ டிக்-ஐ நீக்கிய ட்விட்டர் நிறுவனம்