2026 தேர்தலில் தவெக ஆதிக்கம்: GOAT பட பாணியில் விஜய்யை கொண்டாடும் வெங்கட் பிரபு!
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 109 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு விஜய்யின் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். 'கோட்' (GOAT) திரைப்படத்தின் தலைப்பைக் குறிப்பிடும் வகையில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" என அவர் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காலை 11:30 மணி நிலவரப்படி, தவெக 109 இடங்களுடன் தமிழக அரசியலில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக முன்னிலை
வெங்கட் பிரபுவின் 'கோட்' ஸ்டைல் வாழ்த்து
வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரப்படி, தவெக: 109 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. நடிகர் விஜய்யின் இந்த அரசியல் வெற்றியைத் திரையுலகினரும் கொண்டாடி வரும் நிலையில் விஜய்யை வைத்து 'தி கோட்' (The GOAT) திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (The Greatest of All Time) எனக் குறிப்பிட்டு, கோட் திரைப்படக் காட்சிகளுடன் கூடிய விஜய்யின் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.