Page Loader
அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல் 
தனுஷ் இயக்கி நடிக்கவிருக்கும் படத்தில் திரிஷா கதாநாயகி

அடுத்த ரௌண்டுக்கு ரெடி ஆகும் திரிஷா; D50 படத்தில் இணையப்போவதாக தகவல் 

எழுதியவர் Arul Jothe
Jun 05, 2023
07:02 pm

செய்தி முன்னோட்டம்

கோலிவுட் அல்லாமல் பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த திரைப்படம், தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கிடையில், தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்குவதாக செய்திகள் வெளியானது. தற்காலிகமாக 'D50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கதாநாயகி யார் என்று வெளியிடாமல் இருந்த நிலையில், தற்போது த்ரிஷா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தெரிந்ததும், தனுஷ் மற்றும் த்ரிஷாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு காரணம், இவர்கள் இருவரும் கடைசியாக 'கொடி' திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தனர். படமும் சூப்பர்டூப்பர் ஹிட்.

Dhanush movie D50 update

அடுத்த ரௌண்டிற்கு ரெடி ஆகும் திரிஷா 

நடிகை த்ரிஷா கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் 'குந்தவை' கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு, பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படவாய்ப்புகளும் குவிய தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக தான், 'லியோ' படத்தில் விஜய்க்கு ஜோடி ஆனார். அதன் பிறகு தற்போது அஜித் நடிக்கவிருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படத்திலும் அவர் தான் ஹீரோயின் என்ற பேச்சும் எழுந்தது. இதை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, மலையாளத்தில் மோகன்லால் படத்திலும் நடிக்கிறார் த்ரிஷா. தற்போது தனுஷின் D50 திரைப்படத்திலும் ஜோடி சேர போகிறார். இப்படி த்ரிஷாவின் காட்டில் அடை மழை தான் என அவரின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.