நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்து டாரட் கார்டு ஜோதிடர் வெளியிட்ட முக்கிய தகவல்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழும் நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் திருமணம் குறித்து, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் திருமணத்தை 13 ஆண்டுகளுக்கு முன்பே சரியாகக் கணித்துக் கூறிய பிரபல டாரட் கார்டு ஜோதிடர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள கணிப்பு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அனிருத்துக்கு டாரட் கார்டைப் பார்த்து, அவருக்குக் காதல் திருமணம் தான் நடக்கும் என்றும், மணப்பெண் நடிகை கிடையாது, சென்னையைச் சேர்ந்தவர் என்றும் ஜெயஸ்ரீ துல்லியமாகக் கணித்துக் கூறியிருந்தார். தற்போது அனிருத்துக்கு அவர் சொன்னபடியே திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், த்ரிஷாவின் ஜாதகத்தையும் கணித்துச் சொல்லுமாறு ரசிகர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று ஜெயஸ்ரீ தனது புதிய கணிப்பை வெளியிட்டுள்ளார்.
விவாகரத்து பயம்
த்ரிஷாவின் திருமண வாய்ப்பு
ஜெயஸ்ரீயின் கணிப்பின்படி, த்ரிஷாவுக்கு ஊரைக் கூட்டி பிரம்மாண்டமாகத் திருமணம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
43 வயதாகும் த்ரிஷா, திருமணம் என்று ஒன்று நடந்தால் அது இறுதி வரை நிலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்.
விவாகரத்து பெற்றுப் பிரிந்து வாழ்வதில் உடன்பாடு இல்லாதவர் என்பதால், 'கழுத்தில் தாலி ஏறிவிட்டால் கடைசி வரை கணவருடன் இணைந்து வாழ வேண்டும், எனவே திருமணம் செய்வதற்கு முன்பு 100 முறை யோசிப்பேன்' என்று அவரே முன்பு பேட்டிகளில் தெளிவுபடுத்தியுள்ளார்.
முன்னதாக நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணம் நின்ற கசப்பான அனுபவத்தைத் தொடர்ந்து, தனது முழு கவனத்தையும் சினிமாவில் மட்டுமே செலுத்தி வருகிறார்.