சினிமா ரசிகர்களுக்கும் திரைத்துறையினருக்கும் ஜாக்பாட்; 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கி முதலமைச்சர் விஜய் அரசாணை
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையினைப் பரிசீலித்து, திரையரங்கு விதிகளில் மிக முக்கியமான திருத்தங்களை மேற்கொண்டு தமிழக முதலமைச்சர் விஜய் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இனி குறிப்பிட்ட நாட்களில் தினசரி 5 காட்சிகள் (5 Shows) திரையிட அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின்படி, புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் ஒரு வாரத்திற்கு திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் வரை திரையிடலாம். வார இறுதி நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு), அரசு பொது விடுமுறை நாட்கள் மற்றும் உள்ளூர் பண்டிகை/விடுமுறை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு முறையும் தனியாக எவ்வித அனுமதியும் பெறத் தேவையில்லை என விதிகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில் , புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | pic.twitter.com/2GWV3R35DM
— TN DIPR (@TNDIPRNEWS) May 25, 2026