கமல் முதல் ரஜினி வரை: தமிழ் திரைப்படங்களில் ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் உபயோகித்த பிரபலங்கள்
செய்தி முன்னோட்டம்
'இந்தியன்-2' படத்தில், கமல்ஹாசன், ஹாலிவுட் மேக்அப் கலைஞரின் உதவியுடன், ப்ரோஸ்த்தெடிக் ஒப்பனை செய்து வருகிறார் என பலருக்கும் தெரிந்திருக்கும்.
நேற்று கூட, தனது மேக்அப் உதவியாளருடன், கமல் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலானது.
ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் என்பது, உங்களது முக வடிவத்தை முற்றிலும் மாற்றும் ஒரு வகையான சிந்தெடிக் மேக்அப். அதை இடுவதற்கே 2-3 மணிநேரங்கள் பிடிக்கும். அதிலும் நம்மூர் வெயிலுக்கு அது சில நேரத்திலேயே உருகி விடும். அதேபோல, சில நேரங்களில் அது சரும ஒவ்வாமையும் ஏற்படுத்தும் என அறியப்படுகிறது.
இந்த தருணத்தில், சமீபத்தில் வெளியான திரைப்படங்களில், ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் உபயோகித்த நடிகர்களின் பட்டியல் இதோ:
ரஜினி: எந்திரன் மற்றும் 2 .0 படத்திற்கு ரஜினிக்கு இந்த மேக்அப் தான் போடப்பட்டது.
ப்ரோஸ்த்தெடிக் மேக்அப்
ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் பயன்படுத்திய நடிகர் மற்றும் நடிகையர்
கமல்: கமல் பல படங்களில் ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் அணிந்துள்ளார். அவ்வைசண்முகி, தசாவதாரம், இந்தியன் மற்றும் தற்போது எடுத்து வரும் இந்தியன் 2 என பல படங்களுக்கு இவர் ஹாலிவுட் ஒப்பனை கலைஞர்களை தேர்வு செய்கிறார்.
விக்ரம்: I , இருமுகன் ஆகிய படங்களில் விக்ரம் ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் உபயோகித்தார்.
விஜய் சேதுபதி: சீதக்காதி திரைப்படத்திற்காக, விஜய் சேதுபதி முதன் முதலில் ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் பயன்படுத்தினார்.
காஜல் அகர்வால்: இந்தியன் 2 படத்தில், கமலுக்கு ஜோடியாக நடிக்கும் காஜல் அகர்வாலுக்கு ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் தான் பயன்படுத்தப்படுகிறது. இதை அவர் ஒரு புகைப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
கீர்த்தி சுரேஷ்: மகாநதி படத்தில், பழம்பெரும் நடிகை சாவித்ரி வேடத்தில் நடிப்பதற்க்காக ப்ரோஸ்த்தெடிக் மேக்அப் பயன்படுத்தினார் கீர்த்தி சுரேஷ்