Page Loader
'விக்ரம்' படத்தை தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தில், மீண்டும் கமல்ஹாசனுடன் இணைகிறாரா காளிதாஸ்?
விக்ரம் படஅறிவிப்பின் போது, கமல்ஹாசனுடன் காளிதாஸ் ஜெயராம்

'விக்ரம்' படத்தை தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தில், மீண்டும் கமல்ஹாசனுடன் இணைகிறாரா காளிதாஸ்?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2023
06:12 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியன்-2 படக்குழு, தனது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக தைவான் நாட்டிற்கு பறந்துள்ளனர். படத்தின் நாயகனான, கமல்ஹாசனும், இரு தினங்களுக்கு முன்னர், தைவானுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதனிடையே, நடிகர் காளிதாஸ் ஜெயராம், தைவானில், இயக்குனர் ஷங்கருடன் இருப்பது போல ஒரு புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தைவானில் அவரை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, அவர் இந்தியன்-2 திரைப்படத்தில் நடிக்க போகிறாரா என்பது போன்ற கேள்விகள் இணையத்தில் உலவ தொடங்கிவிட்டன. அப்படி ஒரு வேளை, காளிதாஸ் இந்தியன்-2 படத்தில் இணைவதாக இருந்தால், 'விக்ரம்' படத்திற்கு அடுத்து, கமல்ஹாசனுடன் அவர் இணையும் இரண்டாவது படம் இது. இந்தியன்-2 திரைப்படத்தில், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த் மற்றும் பலரும் நடிக்கின்றனர்.

Instagram அஞ்சல்

இந்தியன் 2 திரைப்படத்தில் காளிதாஸ்?