Page Loader
கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் இணைந்த காஜல் அகர்வால்
இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்த காஜல் அகர்வால்

கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தளத்தில் இணைந்த காஜல் அகர்வால்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 28, 2023
03:13 pm

செய்தி முன்னோட்டம்

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இணைந்தார் காஜல் அகர்வால். இதை அவர் தனது சமூக வலைத்தளத்தில், ஒரு புகைப்படத்துடன் உறுதி செய்தார். படத்தின் படப்பிடிப்பில் சென்ற நவம்பர் மாதம் கலந்து கொண்ட காஜல், நடுவில் சிறிது இடைவேளை எடுத்துக்கொண்டார். தற்போது மீண்டும் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். சுவாரஸ்யமாக புகைப்படத்தில், தனது முகத்தை மறைத்து வெளியிட்டார் காஜல். அவர் பதிவேற்றியுள்ள புகைப்படத்தில், ஒரு மேக்கப் ரூமில் இருப்பது போலவும், அவருடன் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவரும் இருக்கிறார். இந்த திரைப்படத்தில் வயதான தோற்றத்தில் தோன்றும் கமலுக்கு ஜோடியாக காஜல் நடிக்கிறார் என்றும், அதனால் ப்ரோஸ்த்தெடிக் மேக்கப் போடுகிறார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த காஜல்

இந்தியன் 2

சுகன்யா வேடத்தில் நடிக்கும் காஜல்

இந்தியன் முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாதிபதிக்கு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். தற்போது அவரது வேடத்தில் தான் காஜல் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தில், மறைந்த நடிகர் விவேக் நடித்திருந்தார். அவர் கடைசியாக நடித்துக்கொண்டிருந்த படம் இந்தியன் 2. ஊடக செய்திகளின்படி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர் நடித்த காட்சிகள் எதுவும் நீக்கப்படாது எனக்கூறப்பட்டுள்ளது. எனினும், விவேக் காட்சிகளுக்கு, யார் டப்பிங் பேசுவார்கள் என்பது இன்னும் தெரியவில்லை.