நடிகை மாதுரி தீட்சித்துடன் அமர்ந்து வடா பாவை சாப்பிட்ட ஆப்பிள் CEO
ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக், நேற்று,(ஏப்ரல் 17) அன்று இந்தியா வந்தார். மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்டோரை இன்று திறக்கவிருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக டிம் குக் இந்தியா வந்திருந்தார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ வேர்ல்ட் அரங்கத்தில் நடைபெற்ற விழா ஒன்றிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது பாலிவுட்டின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்த விழாவின் போது, பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்துடன் அமர்ந்து, டிம் குக், முதல்முறையாக வடா பாவை உண்டார். அந்த புகைப்படத்தை நேற்று மாதுரி தீட்சித் தனது சமூகவலை தளத்தில் பகிர்ந்தார். தொடர்ந்து இன்று டிம் குக்கும், "என்னுடைய முதல் வடை பாவை எனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி- சுவையாக இருந்தது!"என்று பதிவிட்டார்.