'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் ஒளிபரப்பப்படும் புகழ்பெற்ற சீரிஸ்சில் ஒன்றான, 'தி பிக் பேங் தியரி'க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உண்டு, அதில் இந்தியர்களும் அடங்குவர். அந்த குறிப்பிட்ட சீரிஸ்சில், ஒரு எபிசோட்டில், நடிகை ஐஸ்வர்யா ராயையும், நடிகை மாதுரி தீட்சித்தையும், ஒப்பிட்டு ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதாகவும், அதில், ஹிந்தி நடிகை மாதுரி தீட்சித்தை இழிவுபடுத்தும் விதமாக சில டயலாக்குகள் இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, மாதுரியின் ரசிகர் ஒருவர், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்காக அனுப்ப பட்ட நோட்டீஸில், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் அந்த குறிப்பிட்ட எபிசோடை அகற்ற வேண்டும் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.