வெள்ளித்திரையில் சோழ சாம்ராஜ்யம்: நாம் இது வரை சினிமாவில் கண்டுகளித்த சோழர்களின் பட்டியல்
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் இன்று வெளியாக விருக்கிறது. இத்தருணத்தில், நமது தென்னாட்டின் மூவேந்தர்களின் ஒருவரான சோழர்களை, வெள்ளிதிரையின் மூலம், நம் கண்முன்னே காட்டிய சில தமிழ் படங்களின் பட்டியல் இதோ: பூம்புகார்: இது சோழர் காலத்தில் நடைபெறும் கதை. கதையில் முக்கிய கதாபாத்திரமாக பாண்டிய மன்னன் தோன்றினாலும், முதல் பாதி கதை, எழில்கொஞ்சும் பசுமையான சோழ நாட்டில் தான். கண்ணகியும், கோவலனும் தங்கள் வாழ்க்கையை சோழ நாட்டில் தான் துவங்கினர். ராஜராஜ சோழன்: சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான சரித்திர படம் இது. பார்போற்றும் சோழ சக்ரவர்த்தியான ராஜராஜ சோழனின் வாழ்க்கை கதை தான் இந்த படம். சோழன் நெறிதவறாமல் ஆட்சி புரிந்ததையும், அவர் பெருமையை பற்றியும் பேசும் படம்.
சோழ சாம்ராஜ்யத்தை பற்றி பேசும் படங்கள்
ஆயிரத்தில் ஒருவன்: செல்வராகவன் இயக்கத்தில், கார்த்தி மற்றும் பார்த்திபன் நடித்த இந்த திரைப்படம், நிச்சயம் ஒரு கிளாசிக் படம்தான். சோழ வம்சத்தில் கடைசி ராஜாவாக பார்த்திபனும், அவரின் குலத்தை வேரோடு அறுக்கும் வெறி கொண்ட புலியாக ரீமா சென்-உம நடித்திருப்பார்கள். படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் இன்றளவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். பொன்னியின் செல்வன்: இது வரலாறும் புனைவும் கலந்த ஒரு சரித்திர நாவல். கல்கியின் அற்புதமான எழுத்துக்களில் உருவானது. இதை திரைப்படமாக்க MGR முதல் பலரும் முயற்சி செய்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. அதை வெற்றிகரமாக செயலாக்கி காட்டியுள்ளார் மணிரத்னம். சோழ சாம்ராஜ்யமும், அதற்கு பாண்டிய ஆபத்துதவிகளால் நேரும் சங்கடங்களும் தான் மையக்கதை.