Loading...
தியாகராஜா குமாரராஜா - விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது
'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

தியாகராஜா குமாரராஜா - விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2026
04:16 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை சொல்லல் மூலம் தனக்கெனத் தனி முத்திரை பதித்த இயக்குநர் தியாகராஜா குமாரராஜா மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி, 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'பாக்கெட் நாவல்'. ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாக போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நட்சத்திரப் பட்டாளம்

படத்தில் இணைந்துள்ள நட்சத்திர பட்டாளம்

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தியாகராஜா குமாரராஜா மற்றும் எஸ்.டி. எழில்மதி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், மாளவிகா மோகனன், கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டி மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் சிறப்பு அம்சமாக, நடிகர் ராஜ் பி. ஷெட்டி முதல்முறையாக தமிழில் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியுள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதன் மூலம் தியாகராஜா குமாரராஜாவுடன் ஜி.வி. பிரகாஷ் குமார் இரண்டாவது முறையாகக் கைகோர்த்துள்ளார்.

ADVERTISEMENT