சந்தானம் நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் வெளியானது
நகைச்சுவை நடிகரான சந்தானம் நடித்துள்ள 'இங்க நான் தான் கிங்கு' படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானம் உடன் நடிகர்களான தம்பி ராமையா மற்றும் பால சரவணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கோபுரம் ஃபிலிம்ஸ் பதாகையின் கீழ் சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த இந்த படம், வடக்குப்பட்டி ராமசாமி (2024) படத்திற்கு பிறகு சந்தனம் நடிக்கும் திரைப்படமாகும். ஆனந்த் நாராயண் இயக்கிய இந்தப் படத்தில், ப்ரியாலயா என்ற கதாநாயகி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். முனிஷ்காந்த், மறைந்த மனோபாலா, விவேக் பிரசன்னா, மாறன் மற்றும் கூல் சுரேஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் மே 10ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.