'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது
தனுஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பீரியட் பிலிம் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் பற்றிய அறிவிப்பு இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில், இன்று மாலை, 'உன் ஒளியிலே' என்ற இரண்டாவது பாடலை தயாரிப்பு குழு வெளியிட்டுள்ளது. ஜிவி.பிரகாஷ் குமார் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இப்படத்தில், நாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தீப் கிஷன், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான 'கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்' என்ற தனுஷ் பாடிய பாடல் ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.