LOADING...
'தி ராஜா சாப்' படவிழாவில் நடிகை நிதி அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டத்தால் பதற்றம்
நடிகை நிதி அகர்வால், நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது ஒரு கும்பலால் முற்றுகையிடப்பட்டார்

'தி ராஜா சாப்' படவிழாவில் நடிகை நிதி அகர்வாலை முற்றுகையிட்ட ரசிகர்கள் கூட்டத்தால் பதற்றம்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 18, 2025
09:10 am

செய்தி முன்னோட்டம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் 'சஹானா சஹானா' (Sahana Sahana) பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை நிதி அகர்வால், நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது ஒரு கும்பலால் முற்றுகையிடப்பட்டார். இந்த நிகழ்வு நடிகையை மட்டுமின்றி திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ரசிகர்கள் என்ற போர்வையில் அத்துமீறும் நபர்களை பலரும் கண்டித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

நிகழ்ச்சியின் முடிவில் நடந்தது என்ன?

நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் தனது காரை நோக்கிச் சென்றபோது, அங்கிருந்த கட்டுக்கடங்காத கூட்டம் அவரை சூழ்ந்து கொண்டது. ரசிகர்கள் என்ற போர்வையில் இருந்தவர்கள் நிதி அகர்வாலுக்கு மிக நெருக்கமாக சென்றதால் அவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார். பாதுகாவலர்கள் (Bouncers) மிகவும் சிரமப்பட்டு அவரை மீட்டு காரில் ஏற்றி அனுப்பினர். காரில் ஏறிய பின்னரும் நிதி அகர்வால் மிகவும் பயந்த நிலையில் காணப்பட்டார். "God, what the hell was that?" என்று அவர் பதற்றத்துடன் கேட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

கண்டனங்கள்

இந்தச் சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன

பிரபல பாடகி சின்மயி தனது எக்ஸ் (X) பக்கத்தில், "இவர்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒரு பெண்ணை வேட்டையாடும் ஓநாய்கள் (Hyenas) போல நடந்து கொள்கிறார்கள்" என மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இவ்வளவு பெரிய நட்சத்திரங்கள் வரும் நிகழ்ச்சிக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத படக்குழுவினர் மீதும், வணிக வளாக நிர்வாகத்தின் மீதும் நெட்டிசன்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 'தி ராஜா சாப்' திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து நிதி அகர்வால் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.

Advertisement