'கங்குவா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை போஸ்டர் வெளியிட்டு உறுதிசெய்த படக்குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நாயகி திஷா பதானி ஜோடியாக நடிக்கும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார், வில்லனாக ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்டி நடித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. இதன் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், படத்தின் முக்கிய பணியான விஎஃப்எக்ஸ் பணிகளை அக்குழு தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படக்குழு புது போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு, இப்படம் 2024ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்யப்படும் என்பதை தெரிவித்துள்ளது.