சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படங்களின் பட்டியல் வெளியானது
21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு முதல், இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் அறக்கட்டளையால், சென்னை சர்வதேச திரைப்பட விழா நடத்தப்படுகிறது. பிவிஆர் மல்டிபிளக்ஸ் (முன்னர் சத்யம் சினிமாஸ்), அண்ணா திரையரங்கில், இந்த வருடம் இவ்விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் 57 நாடுகளைச் சேர்ந்த, 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. விழாவின் தொடக்க நாளில், கேன்ஸ் விருது வென்ற 'அனாடமி ஆஃப் எ ஃபால்' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது.
விழாவில் திரையிடப்படும் 12 தமிழ் படங்கள்
இந்த விழாவில் 12 தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன. வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, வசந்த பாலனின் அநீதி, விக்ரம் சுகுமாரனின் ராவண கோட்டம், மந்திர மூர்த்தியின் அயோத்தி, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் இயக்கிய போர் தோழில், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால், பிரபு சாலமனின் செம்பி, அனிலின் சாயவனம், சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், மற்றும் அமுதவாணனின் விந்தியா விக்டம் வெர்டிக் V3 ஆகிய திரைப்படங்கள், தமிழ் திரைப்படங்கள் பிரிவில் போட்டியிட உள்ளன.