Page Loader
ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் இலவசம்: படம் குறித்து வெளியான புதிய அப்டேட்  
ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் இலவசம்

ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் இலவசம்: படம் குறித்து வெளியான புதிய அப்டேட்  

எழுதியவர் Arul Jothe
Jun 08, 2023
02:58 pm

செய்தி முன்னோட்டம்

பல ஒத்திவைப்புகள் மற்றும் பின்னடைவுகளுக்குப் பிறகு, பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் இந்த மாதம் வெளியாகிறது. இயக்குனர் ஓம் ரவுத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், இறுதியாக வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து, 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், ஆதிபுருஷ் ரசிகர்களுக்காக ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்தின் 10,000 டிக்கெட்டுகளை இலவசமாக தருவதாக, அவர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஆனால், இலவசமாக வழங்கப்படும் அந்த டிக்கெட்கள், தெலங்கானாவில் உள்ள அரசு பள்ளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஆதிபுருஷ் படத்தின் டிக்கெட் இவர்களுக்கெல்லாம் இலவசமாக வழங்கப்படவுள்ளது