ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் நவம்பர் 8 அன்று வெளியாகிறது; படக்குழு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி திரைப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. முன்னதாக, வியாழக்கிழமை (நவம்பர் 6) அன்று ஜனநாயகன் படத்தின் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வைரலாக தொடங்கியது. இந்நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் புதிய அப்டேட்டாக, படத்தின் முதல் பாடல் நவம்பர் 8 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Thalapatheeee 🔥
— KVN Productions (@KvnProductions) November 6, 2025
Entryyy from Nov 8th #Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/ofhWzvzyRx