
புத்தாண்டில் வெளியாகிறது 'ரத்னம்' படத்தின் முதல் சிங்கிள் பாடல்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் ஹரி மூன்றாவது முறையாக இணையும் #விஷால்34 திரைப்படத்திற்கு, 'ரத்னம்' என்று பெயரிடப்பட்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன் தகவல் வெளியாகியது.
இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சாமி-2 படத்திற்கு பிறகு, அருண் விஜய் நடிப்பில் 'யானை' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஹரி, தற்போது மீண்டும் விஷாலுடன் இணைந்துள்ளார்.
இயக்குநர் ஹரியும் விஷாலும் இதற்கு முன்பு, 'தாமிரபரணி' மற்றும் 'பூஜை' ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணி புரிந்திருக்கின்றனர்.
விஷாலின் 34வது படமான ரத்னத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
மேலும், ப்ரியா பவானி சங்கர், யோகிபாபு, சமுத்திரகனி, கௌதம்வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
நாளை வெளியாகிறது 'ரத்னம்' படத்தின் முதல் பாடல்
New year begins with a bang 🔥#VaaraiRathnam - First shot lyrical video from #Rathnam coming out tomorrow at 7AM.
— Stone Bench (@stonebenchers) December 31, 2023
Starring Puratchi Thalapathy @VishalKOfficial.
A film by #Hari. Coming to theatres, summer 2024.
A @ThisisDSP musical. @priya_Bshankar @stonebenchers… pic.twitter.com/AYqvm0JZOY