Page Loader
விமல் நடிக்கும் `போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

விமல் நடிக்கும் `போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

எழுதியவர் Sindhuja SM
May 04, 2024
07:03 pm

செய்தி முன்னோட்டம்

பசங்க, வாகை சூடவா போன்ற திரைப்படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்த நடிகர் விமல் `போகுமிடம் வெகுதூரமில்லை' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். கில்லி, கிரீடம் போன்ற பிரபல திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த நடிகர் விமல், இயக்குநர் பாண்டியராஜ் இயக்கிய பசங்க என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படம் பெருமளவில் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல், அதற்கு சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன் பிறகு, அவர் நடித்த வாகை சூடவா என்ற திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற்றது. ஆனால், அதன்பின், கடந்த 3 ஆண்டுகளாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த விமலுக்கு தற்போது `போகுமிடம் வெகுதூரமில்லை' என்ற புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

போகுமிடம் வெகுதூரமில்லை' ஃபர்ஸ்ட் லுக்