ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
'பொன்னியின் செல்வன்' வெற்றியை அடுத்து, நடிகர் ஜெயம் ரவி, 'ஜீனி' என்ற ஃபேண்டஸி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. வேல்ஸ் இன்டெர்னஷனல் நிறுவனத்தின் 25 -வது தயாரிப்பான இந்த படத்தை புதுமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில், க்ரிதி ஷெட்டி, கல்யாணி ப்ரியதர்ஷன் மற்றும் வாமிகா கெபி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மேலும் நடிகை தேவயானி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகி வரும் இப்படம், ஒரு புதுமையான ஃபேண்டஸி திரைப்படமாகும். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்த்தால், ஜெயம் ரவி இப்படத்தில் அலாவுதீன் பூதம் போன்ற ஒரு வேடத்தில் நடித்துள்ளார் என்பது தெரிகிறது.