ஆஸ்கார் விருதுகள் 2023: 'The Elephant Whisperers' சிறந்த டாக்குமெண்டரி குறும்படத்திற்கான விருதை வென்றது
உலகெங்கிலும் உள்ள சினிமா பிரபலங்களும், சினிமா ரசிகர்களும் ஒருசேர ஆவலுடன், எதிர்பார்ப்பது இந்த ஆஸ்கார் விருதை தான். தங்கள் படைப்பிற்கு கிடைத்த உயரிய அங்கீரகமாக அவர்கள் இந்த விருதை கருதுகிறார்கள். அப்படிபட்ட முக்கியத்துவம் வாய்ந்த, ஆஸ்கார் விருதுகள், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி, (மார்ச் 13) இன்று காலை 5:30 மணிக்கு துவங்கிய இந்த விழா நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்தியாவிலிருந்து இம்முறை மூன்று திரைப்படங்கள் ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி இருந்தது. ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில், RRR படத்தின் 'நாட்டு நாட்டு' பாடலும், 'ஆல் தட் பரீத்ஸ்' என்கிற குஜராத்தி மொழித்திரைப்படம், சிறந்த ஆவண படம் பிரிவிலும், 'தி எலிபாண்ட் விஸ்பரெர்ஸ்' என்கிற திரைப்படமும், சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் போட்டியிட்டது.
சிறந்த டாக்குமெண்டரி குறும்படத்திற்க்கான விருதை வென்ற 'தி எலிபாண்ட் விஸ்பரெர்ஸ்'
இந்திய திரைத்துரைக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இந்த ஆஸ்கார் விருதை வென்றுள்ளது 'தி எலிபாண்ட் விஸ்பரெர்ஸ்' குறும்படம். கடந்த 2009 -ஆம் ஆண்டில் வெளியான 'Slumdog Millionaire' படத்திற்கு பிறகு, ஆஸ்கார் விருதை இந்தியாவிற்கு கொண்டு சேர்த்து பெருமைப்பட வைத்துள்ளது இந்த குறும்படம். 'சிறந்த டாக்குமெண்டரி குறும்படம்' என்ற பிரிவில் 'The Elephant Whisperers' திரைப்படம் விருதை வென்றது. கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கிய இந்த ஆவணப்படம், கைவிடப்பட்ட இரண்டு யானைகளும், அவற்றின் பகங்களுக்குமான பாசப்பிணைப்பை பற்றி பேசுகிறது. குனீத் மோங்கா, இதை தயாரித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக ஆஸ்கார் விருது வாங்கியது, 'Slumdog Millionaire' படத்தின் இசைக்காக, 'இசைப்புயல்' AR ரஹ்மானும், சிறந்த சவுண்ட் மிக்ஸிங்-காக ரசூல் பூக்குட்டியும் என்பது குறிப்பிடத்தக்கது.