'பிக் பாஸ்' பாணியில் வரப்போகும் 'The 50'! பிக் பாஸ் 18 பிரபலம் ஸ்ருதிகாவும் களம் இறங்குகிறார்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'தி 50' ரியாலிட்டி ஷோ, வரும் பிப்ரவரி 1, 2026 முதல் கலர்ஸ் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது. பிரெஞ்சு நாட்டின் புகழ்பெற்ற 'Les Cinquante' நிகழ்ச்சியின் தழுவலான இத்தொடரை, பிரபல இயக்குநர் ஃபாரா கான் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 50 பிரபலங்களின் பட்டியல் மெல்ல மெல்ல வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் முடிவடைந்த 'பிக் பாஸ் 18' நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருந்த கோலிவுட் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் இதில் போட்டியாளராக பங்கேற்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வித்தியாசம்
இது பிக் பாஸ் விட வித்தியாசம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்
பிக் பாஸ் போலத் தனிப்பட்ட விதிகள் ஏதுமின்றி, ஒரு பிரம்மாண்ட மாளிகையில் 50 பிரபலங்கள் அடைக்கப்படுவார்கள். சுமார் 50 எபிசோட்கள் கொண்ட இந்தத் தொடரில், பார்வையாளர்களும் மறைமுகமாக பங்கேற்கலாம். அதாவது, தங்களுக்கு பிடித்த போட்டியாளரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஆதரவு அளிக்கலாம்; அந்தப் போட்டியாளர் வெற்றி பெற்றால், பரிசு தொகையில் ஒரு பங்கு அந்த ரசிகருக்கும் வழங்கப்படும். வித்தியாசமான விளையாட்டுகள், கூட்டணி மாற்றங்கள் மற்றும் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத விறுவிறுப்பு என 'தி 50' இந்திய திரையுலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.