தளபதி 69: விஜய் முதன்முறையாக கைகோர்க்கவிருக்கும் இளம் இயக்குனர்
தளபதி விஜய் அரசியலில் இறங்கியதையடுத்து, அவரின் 69வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுந்துள்ளது. ஏற்கனவே இருமுறை வெற்றி படத்தை தந்து, LCU-வில் நுழைந்த லோகேஷ் கனகராஜ் உடன் இணைவார் என கூறப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே கைதி 2 , விக்ரம் 2, ரோலெக்ஸ் என வரிசையாக படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் DT Next-இல் வெளியான தகவல்படி, விஜய் இளம் இயக்குனர்களான RJ பாலாஜி மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரிடமும் ஒன்லைன் கேட்டுள்ளாராம். இருவரின் கதைக்களமும் பிடித்துப்போகவே, இருவரையும் பக்காவான திரைக்கதை ஒன்றை எழுத சொல்லி இருக்கிறாராம். அது அவருக்கு பிடித்துவிட்டால், இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்வார் என கூறப்படுகிறது.