நாளை வெளியாகிறது 'தளபதி 68' திரைப்படத்தின் பூஜை வீடியோ
நடிகர் விஜய்யின் 'லியோ' திரைப்படம் வெளியாகி வணிகரீதியாக வெற்றி பெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படமான 'தளபதி 68'-ன் பூஜை வீடியோ நாளை நண்பகல் 12:05 மணிக்கு வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தளபதி 68' திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இதுபற்றிய அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இந்த படத்திற்கான பூஜை இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இப்படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க போவதாகவும், அதற்காக படக்குழுவினர் சென்ற மாதம் அமெரிக்கா சென்று தொழில்நுட்பங்களை கண்டு வந்ததாகவும் செய்திகள் கூறிய நிலையில், நாளை இப்படம் தொடர்பான முதல் வீடியோ வெளியாக உள்ளது.